Saturday, January 10, 2009

காதல் தடம்
----------------
மனதின் தீராத பக்கங்களில்
உன் பெயரை கிறுக்குகின்றது
காதல்
__

ஆசையின் அனைத்து பரிணாமங்களிலும்
தெரிகிறது உன் பிம்பம்
தேவதையாக

__

எனக்கான அழகிய உலகத்தில்
உனக்கு மட்டுமே இடம்
இருக்கிறது



நீ என்னை பிரிந்தாலும்
கிறுக்கிய பெயரும்
தேவதை பிம்பமும்
உனக்கான இடமும்
என்றும் மாறாமல்
உன் நினைவுகளின் தடமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்.............

Thursday, January 8, 2009

நீ…நான்…நிழல்…
மெளனமாய் நாம்

கண்கலந்திருந்தபோது

நம்

நிழல்கள் பேசிக் கொண்ட

சங்கதி என்னவாக இருக்கும்?

____________________

நீ காதலிக்க

தொடங்கிய பின்

என் நிழலிலும்

வர்ணங்கள்!

_________________________

ஒட்டி அமர்ந்தோம்

கட்டிக் கொண்டன

நிழல்கள்!

___________________

அடுத்த சந்திப்பிற்காக

காத்திருக்கிறோம்;

உனக்காக நானும்

நின் நிழலுக்காக

என் நிழலும்!

________________________

இவ்விடயத்தில்

உன்னைக்காட்டிலும்

உன் நிழல் மேல் ;

முத்தம் கேட்டால்

முகம் சுழிப்பதில்லை

என் நிழலிடம்!

இதற்குப் பெயர்தான் காதலா...?


உன் ஈர தென்றல் பார்வை

என் நினைவு மேகங்களை கலைத்ததால் பொழியும்

இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்

--காதலா???

Thursday, January 24, 2008

காதல்

என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,
என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள் மேடையில்,
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,'இல்லை.,

காதல்' என்றாள்...

Sunday, October 7, 2007

இந்த கவிதை என் நண்பிக்கு

நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............
தொடர்வாயா
உன் நட்பை இறுதி வரை..........?

ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி
,நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
ம‌ர‌ண‌மோ எனை ம‌றும‌ண‌ம்
செய்ய‌ தூண்டுகிற‌து.

க‌ண்ம‌ணியே,
உனை ச‌ந்திக்க‌
ஒரு வாய்ப்பு கொடு.
பிஞ்சு விர‌லால் எனை மெல்ல‌ தொடு,
உனை நேசிக்க‌ ஆணையிடு,
உன் அழகை ஆள‌விடு.

உன் இத‌ழ் மீது இருக்க‌விடு,
உன்னில் தொலைத்த‌ என்னை தேட‌விடு.
உன் ம‌டிமீது எனை மாய்த்துவிடு
அதுவ‌ரை, ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு