பாய்ந்த வெள்ளையாறு,
ஓய்ந்த இடத்தில் உருவாக்கிடும்!!
இரண்டில் ஒரு ஜாதி -ஆனால்
இரண்டுமே மனித ஜாதி!
இயற்கைக்கே இல்லாத பிரித்திடவும் இயலாத
,அதிகாரம் எவன் கொடுத்ததிங்கு??
மனிதனுக்கு மனிதனே
ஜாதிவர்ணம் பூசிட....
பூக்களை பிய்த்தெரிந்திட
எவன் ஏந்தின கோடாரி
இந்த ஜாதிவெறி?!
ஜாதிக்கலவரங்களில்...
வெட்டிக்கொள்ளும்போதெல்லாம்
கண்கள் காணவில்லையா?
திட்டுதிட்டாய் வழியும் இரத்தம்
சிவப்பு நிறம் தானென்று!
வெட்டுபட்டு விழுந்த உறுப்புமனித கரம் தானென்று!
ஜாதிக்கலவரங்களில்...
தீயை மூட்டின போதெல்லாம்
காதுகள் கேட்கவில்லையா??
அழுகின்ற குரல்கள்மனித ஜாதியென்று! -தீயில்
அழுகிப்போன பாகங்கள்
மனித உடலின் மீதியென்று!
தண்ணீரும், தேநீரும்!!
கண்ணாடி குவளையில்!!
மேல் சாதிக்காரனுக்கு...
அலுமினிய குவளையில்!!
கீழ் சாதிக்காரனுக்கு....
பாவம்..
கண்ணாடிகளும்,அலுமினியங்களும் கூட,
தப்பிக்கவில்லை உங்களின்
அற்பத்தனமான ஜாதிவெறிக்கு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment