வான் விழியாள்நீல வானில் உலாவும்...
வெள்ளை நிறத்தில்
அந்த வெண்ணிலவு!
வெள்ளை வானில் உலாவும்....
கருமை நிறத்தில்
அவள் கண்ணிலவு!
யார் திட்டியது கடுமையாக?!
அந்த வெண்ணிலவு
அழுகிறதே கண்ணீராய்!
எந்த தேசம் வறுமையாக?!
அவள் கண்ணிலவு பொழிகிறதே மழை நீராய்...
அவளின்.....
விழிகள் உறங்கும் ஒவ்வொரு இரவும் அமாவாசைதான்!
-அன்று, பவுர்ணமியே என்றாலும்!
அவளின்.....விழிப்படலத்தில்,
செந்நிறத்தில் படர்ந்திருக்கும் மரமில்லாமல் சில கிளைகள்....
மின்னல் கீற்றுகளாய்! அவளின்.....
விழிகளின் மேலே வளைந்திருக்கும்
ஒற்றை நிறத்தில் வில்களிரண்டு! அதிசய வானவில்லாய்!
அவளின்.....
விழிகளைச் சுற்றிலும் இமை புற்கள்,
பெய்கின்ற மழையாக....
அவளின்....
ஒரு விழி மிகப்பெரிய அந்த வானமாய்!
இரண்டு மிகச்சிறிய வானங்கள் அவள் விழிகளாய்!
நீ! மீன்விழியாள்
மட்டுமல்லவான் விழியாளும் தான்!
உயிர் இன்னும் உருகும்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment